வியாழன், 1 அக்டோபர், 2009

இவர்களும் மனிதர்கள் தான்!


திருநங்கைகள்! உண்மையில் ஒரு பாவப்பட்ட ஜந்துக்களா? ஒதுக்கப்பட வேண்டிய உயிர்களா? அவர்கள் மனிதர்களா?
சமீபத்தில் “நினைத்தாலே இனிக்கும்” என்று ஒரு படம் பார்த்தேன், அதில் ஒரு காட்சி என் மனதை நெருடியது, திரையரங்கத்துக்கு நன்பர்கள் மூவர் செல்வார்கள் அவர்களுக்கு அருகில் மூன்று திருநங்கைகள், விளக்குப் போட்டவுடன் அவர்களை பார்க்கிறார்கள் தன் அருகில் திருநங்கைகள் என்று தெரிந்தவுடன் அவர்களுடைய முகம் ஒரு முகம் சிதைந்த தொழுநோயாளியை கண்டதை போல் அருவறுப்பு அடைகிறது. பின்னர் ஒருவரையொருவர் நக்கல் அடித்துக் கொண்டு செல்கிறார்கள். அது அந்த படத்தில் நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டது(தினிக்கப்பட்ட) காட்சி. இந்த படம் மட்டுமல்ல தமிழ் படங்கள் பலவற்றில் பல முன்னணி இயக்குனர்களும், தன்னை அறிவுஜீவிகளாக அடையாளம் காட்டிக்கொள்ளும் இயக்குனர்களும் இதுபோன்ற வக்கிரமான காட்சிகளைப் படத்தில் தினிக்கிறார்கள், கேட்டால் ”சமூகம் அப்படிதான் பார்க்கிறது” என்று பதில்.
சமூகம் அப்படிதான் பார்க்கிறதா?
அவர்களை ஒதுக்கப்பட்டவர்களாக, விசித்திரமான ஜந்துக்களாக தான் பார்க்கிறது, அவர்களை கண்டால் ஒதுங்குகிறது, தள்ளி நின்று கேலி பேசுகிறது.
தீயினால் சுட்டப்புன் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
யார் ஒருவரையும் நேரடியாக ஆயுதம் கொண்டு தாக்க வேண்டும் என்பதில்லை சமூகத்தின் மொழியில் உள்ள சொற்கள் போதும். நம்முடைய சமூக வழக்கில் அது நிறையவே இருக்கிறது. நன்பர்கள் யாரையாவது கேலி செய்யும் போது அலி, ஒன்பது போன்ற சொற்கள் உபயோகப் படுத்துவது நம் சமூகத்தில் சாதாரனம். கேலி செய்பவருக்கோ கேலிக்கு உள்ளாக்கப்படுபவருக்கோ அது சாதாரனமாக தான் தோன்றும், ஆனால் அதன் உள்ளர்த்தத்தை ஆராய்ந்தால் நன்பர்களை கேலிசெய்வதன் மூலம் திருநங்கைகளை கீழ்த்தரமானவர்களாக நிலை நாட்ட முற்படுகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. நம் சமூகத்தில் இருந்து அவர்களை எவ்வளவு தள்ளிவைக்க முடியுமோ அவ்வளவு தள்ளிவைக்கிறோம். நம்மை நியாயப் படுத்துவதற்காக அவர்கள் மீது நிறைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறோம் அவை.
1. அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
2. நம்மை கண்டால் வக்கிரமாக நடந்து கொள்கிறார்கள்.
3. பிச்சை கேட்கிறார்கள் தராவிட்டால் ஆபாசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
உண்மை தான் மறுக்கவில்லை, ஆனால் அவர்களின் இந்த செயல்பாட்டிற்கு என்ன காரனம்? யார் காரனம்? சந்தேகமே இல்லை நாமும் நம் சமூகமும் தான். நம்மை போல் அவர்களும் மனிதர்கள் தான் ஏற்று கொள்வதில்லை, அவர்களை நமக்கு சமமாக மதிப்பதில்லை.
குடும்பத்துடன் வாழ்ந்து வரும் அவர்கள் தம்மில் ஏற்படும் மாற்றங்களை உணரும்போது குடும்பத்தாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்படுகிறாள். சொந்தபந்தங்களால் புறக்கனிக்கப் பட்டப் பின்பு அங்கு வாழமுடியாமல் வெளியேரி வருகிறாள். செல்லும் இடங்களில் எல்லாம் வீடு கிடைப்பதில்லை, வேலை கிடைப்பதில்லை, யாரும் பழகுவதில்லை, வக்கிரமான எண்ணம் கொண்டோர் அவர்களிடம் தவரான என்னத்தில் நெருங்குகின்றார்கள். அவர்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள தன்னை சுற்றி ஒரு வேளி அமைத்து கொள்கிறார்கள், தன்னை கண்டு அனைவரும் பயம் கொள்ளும்படி நடந்து செல்கிறார்கள். அடுத்து வாழ்வாதாரம்? யாரும் வேலை கொடுக்க முன்வராத சூழ்நிலையில் சிலர் பிச்சையெடுக்கிறார்கள், சிலர் தவரானவர்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிடுகிறார்கள்.
திருநங்கைகளிடம் அன்பு காட்டி பாருங்கள், அவர்களை உங்கள் சகோதரிகளாக எண்ணிப் பழகுங்கள், அவர்களைவிட அன்பானவர்களை நீங்கள் பார்க்க இயலாது. அன்புக்காக ஏங்கும் ஜீவன்கள் அவர்கள். அவர்களையும் மனிதர்களாக மதியுங்கள் வேரொன்றும் அவரகள் உங்களிடம் கேட்பதில்லை.
கடைசியாக திரைபடங்களில் உள்ள வக்கிர காட்சிகளுக்கு சமூகத்தின் மீது பழி போடும் இயக்குனர்கள் கவனிக்க. அவர்களின் துன்பங்களை புரிந்துக் கொல்லுங்கள், அவர்களுக்கும் அங்கிகாரம் தாருங்கள். சாமானியர்களாக வாழ நிறைய பேர் முற்படுகிறார்கள் அவர்களுடைய எண்ணங்களை மக்களுக்கு காட்டுங்கள், அவர்களுடைய துன்பங்களை திரையில் காட்டுங்கள்.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

இந்தியன் என்பதில் வெட்கப்படு

நான் இன்றளவும் ஒரு சக இந்திய குடிமகனாகத்தான் வாழ முற்ற்பட்டுக்கொண்டிருக்கிறேன், இந்திய மட்டைபந்து ஆட்டத்தை கண்டு அற்பரிக்கிறேன், தேசிய கிதம் பாடினால் தனிச்சையாக எழுந்து மரியாதையை தருகிறேன், ஏ.ஆர்.ரஹுமனுக்கு புகழ்மாலை சூட்டுகிறேன், நாடு பெருமை அடையும் போதெல்லாம் நானும் பெருமைபடுகிறேன். ஆனால் நம் நாட்டின் வரலாறு சித்தரிக்கபடிருக்கிற விதமும் மதசார்புதன்மையும் எண்ணை ஒருபக்கம் வேதனை படுத்த, தலைமையின் தமிழின விரோத போக்கும் எனை கேள்விகளை எழுப்ப சொல்கிறது.
காவிரி, முல்லை பெரியாறு, ஒகேனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இன்னும் பல பல பிரச்சனைகள் ஒன்றாவது தமிழகத்திற்கு சாதகமாக முடிய இந்திய அரசு முயற்சி செய்ததுண்டா?
பாகிஸ்தானில் பஞ்சாபி ஒருவன் சிறை பட்டான் என்ற தகவல் அறிந்ததும் நாடே குக்குரலிட்டது நானும்தான் ஆனால் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுடப்பட்டு அதில் நானுறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் அதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே ஏன்?
ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில் மட்டுமே இருந்த ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதில் அந்த கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களும் உடந்தை என்று நிருபிக்கபட்டபின்னும் சரியான விசாரணை நடத்தாமல் புலிகள் தான் காரணம் என்று சப்பைக்கட்டு ஒன்று கட்டிகொண்டு ஈழத்தில் தமிழ்மக்களை கொன்றுகுவிக்கிறது இந்த அரசு. அங்கு செத்துகொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மற்றும் நுற்றுக்கணக்கான தமிழக மீனவர்களின் உயிரைவிடவும் அந்த கட்சித் தலைவரின் உயிர் எவ்விதத்தில் உயர்வாகப்பட்டது?
தமிழகத்தில் ஈழப் போராட்டத்திற்காக இத்தனை உயிர்த் தியாகங்கள் இத்தனை ஓலக் குரல்கள் எழுந்து கொண்டிருக்கும் பட்ச்சத்தில் தொடர்ந்து அதை எல்லாம் சட்டைசெய்யாமல் சிங்களத்த்ற்கு நேரடி ஆதரவும் ஆயுதவுதவியும் செய்துகொண்டிருக்கிறது இந்த அரசு.
மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பிற்றிக்கொண்டு தமிழர்களின் கருத்துரிமையை பறிக்கிறது, தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதராவாக பேசுவது தவிறில்லை என்று நீதிமன்றமே தீர்ப்பு கூறிய பிறகும் தொடர்ந்து ஆதரவாளர்களை கைது செய்வது பிறகு விடுவிப்பதுமாக உள்ளது.
இதற்கெல்லாம் மகுடம் சுட்டினாற்போல் மிகப்பெரிய அவலம் இந்த போலி ஜனநாயக நாட்டின் பாரளுமன்றம் அருகில் போரடுவதர்கேன்றே ஒரு இடத்தை ஒதிக்கிவைத்து யார் வேண்டுமானாலும் அங்கு வந்து போராடலாம் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம் என்று இருப்பது, அந்த இடத்தில் ஒரு சமூகத்தினர் 1993 இல் இருந்து அமர்ந்து இருக்கிறார்கள் அனைத்து பிரதமருக்கும் கடிதம் எழுதி விட்டார்களாம் இருந்தும் ஒரு அரசு அதிகாரி கூட அவர்களை சந்தித்து பேசவில்லை. இதையெல்லாம் ஓரம் வைத்துவிட்டு என்னை ஒரு இந்தியன் என்றுதான் பார்த்தேன் என்னகொடுமை மற்ற மாநிலத்தவர் யாவரும் எனை தமிழனாக அல்லவே பார்கின்றனர் நான் என்ன செய்ய சொல்லுங்கள்?

திங்கள், 5 ஜனவரி, 2009

கிளிநொச்சிக்குள் சிங்கள ரானுவம் புகுந்தது........


லட்சக்கணக்கான் படைவீரர்கள், இந்தியா, சீனா,பாகிஷ்த்தான்,அமெரிக்கா,இஷ்ரேல் மற்றும் பல ஒருமித்த ஆதரவுடன், நவின ரக ஆயுதங்கள் குவிப்பு, கண்னிமைக்கும் நேரத்தில் பல‌ குண்டுகளை வீசிவிட்டு கடந்து செல்லும் வானூர்திகள் இவைகள் அனைத்தும் கொண்ட முப்படைகள். இதையெல்லாம் வைத்துக்கொண்டு மூன்று மாதங்களாய் போரிட்டு ஒருசிறிய நிலப்பகுதியைக் கைப்பற்றியிருக்கிரது சிங்கள ரானுவம். இதற்கிடையில் பலநூறு படைவீரர்கள் உயிர்பலி, அப்பாவித் தமிழர்களிடம் வெறியாட்டம், இதையெல்லாம் கடந்து கிளிநொச்சிக்குள் புகுந்துள்ளது சிங்கள ரானுவம்.

படைவீரர்கள் குதுகளித்தனர், ராசபக்ஷே கொக்கரித்தார், ஊடகங்கள் கொன்டாடித்தீர்தன [குறிப்பாக இந்திய ஊடகங்கள்] தமிழர்கள் வீழ்வது சிங்களர்களை விடவும் இந்திய ஊடகங்களுக்கு மிகவும் கொன்டாட்டத்தை தருவதன் காரனம் எனக்கு புரியவில்லை. இது வானலாவிய வெற்றி விடுதலைபுலிகளின் அரசியல் தலைநகரத்தை கைப்பற்றிவிட்டோம், அவர்களும் கிட்டதட்ட அழிந்துவிட்டார்கள், இனி அவர்களால் இயங்கமுடியாது, அவர்களிடம் இருந்த அத்துனை தளவாடங்களும் அழிக்கப்பட்டுவிட்டன, மிச்சமிருப்பவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தால் உயிர் தப்பலாம் என்று கொக்கரித்தார் ராசபக்ஷே. அவர் அறிக்கைவிட்ட ஒருமணி நேரத்தில் சிங்கள ரானுவத் தளமொன்றில் மனிதவெடிகுண்டு ஒன்று வெடித்து சிதர மூவர் பலி பலர் படுகாயம் என்று அறிவிப்பு வந்தது.

சில மணித்துளிகளுக்குப் பிறகு திரு. நடேசன் அவர்கள் புலிகளின் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பேட்டி கொடுக்கிறார், "ஆம் உண்மைதான் ஆளில்லாத கிளிநொச்சியயை சிங்கள ரானுவம் கைபற்றிதான் விட்டது.

இதில் நமக்கு புலப்படும் உண்மை என்ன?
சுமார் மூன்று லகரம் மக்கள் வாழ்ந்துக்கொண்டிருந்த கிள்நொச்சியை சிங்கள ரானுவம் கைப்பற்றியபோது ஒரு ஆள் கூட இல்லையேஎங்கே போனார்கள் அத்துனைபேரும். புலிகளின் தகவல்ப்படி இருபத்தியைந்து நாட்களுக்கு முன்னமே புலிகள் முதற்கொண்டு அத்துனைபேரும் வேரு இடத்துக்கு சென்றுவிட்டார்கள். அதுமட்டுமில்லாமல் அங்கு புலிகளால் உருவாக்கப்பட்ட 135 கோடி மதிப்பிலான நிர்வாக அலுவலகங்கள் அனைத்தும் தரைமட்டமக்கப்பாட்டது. இதற்கு முன் வைக்கப்பட்ட காரணம் தங்களால் உருவாக்கபட்ட சிறு துரும்புக் கூட சிங்கள ரானுவத்திற்கு வுதவக்கூடாது என்பதுதான். இதில் 90 கோடி செலவில் புலிகளால் செங்கல் செங்கல்லாக பார்த்துக் கட்டப்பட்ட ஈழப் பல்கலைகழகமும் அடங்கும்.

இதற்கிடையில் சில பல நாட்களாக புலிகள் எதிர்த்தாக்குதலும் நடத்தவில்லை இருந்தும் கிளிநொச்சிக்குள் புகுவதற்கு இருபத்தியைந்து நாட்கள் ஆகிவிட்டன என்றால் என்ன காரனம்? அவர்களுக்கு புலியைக் கண்டு கிலி வந்துவிட்டது. அங்கு அது இருக்குமோ இங்கு இது இருக்குமோ என்று பயந்து பயந்து ஒளிந்து ஒளிந்து அங்குலம் அங்குலமாக நகர்ந்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் பாம்பில்லாப் புற்றுக்குள் எலிகள் நுலைவதைப்போல், புலிகள் இல்லா கிளிநொச்சிக்குள் சிங்கள ரானுவம் புகுந்நுவிட்டது. இதனால் புலிகள் தோற்றுவிட்டனர் என்று கருதமுடியாது, இதுபோல் புலிகள் பலமுறை பின்வாங்கி சிங்களம் மாதகணக்கில் போரிட்டு கைப்பற்றிய இடங்களை புலிகள் குறிகிய காலக்கட்டத்தில் அதிவேகமாக மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு எழும் சில கேள்விகள்:
1. ஆளில்லாத ஒரு நகரத்திற்குள் புகுவதற்கு இருபத்தியைந்து நாட்கள் தேவைப்பட்டதன் காரனம் என்ன?
2. இல்லை மக்களுடன் புலிகளும் அங்கு இருந்தார்கள் என்றால், இவர்கள் உள்ளே புகுந்த ஒரு சிறிய நேரத்தில் அவர்கள் அனைவரும் எங்குச் சென்று மறைந்தார்கள்.
3. புலிகளின் நிர்வாக நகரத்தை பிடித்துவிட்டோம் இனி அவர்களால் இயங்கமுடியாது என்று கூறினார்கள், ஆனால் சிறிது மணித்துளிகளிலே திரு. நடேசன் அவர்கள் புலிகளின் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் உறையாற்றுகிறார், அப்படியானால் அவைகள் எல்லாம் இயங்குகிரது என்றுதானே அர்த்தம்?
4. அவைகள் இயங்குபட்சத்தில் அடுத்த நிர்வாக நகரம் உருவாகிவிட்டதா?

இந்த பின்வாங்களில் புலிகளுக்கு சில நன்மைகளும் நடந்திருக்கிறது.
புலிகளிடம் ஒரு நல்ல அரசாங்கம் நடந்துக் கொண்டிருக்கிறது, அவர்களிடம் நிதித்துறை, நீதித்துறை, காவல்த்துறை, பொருளாதரத்துறை, நிர்வாகத்துறை இன்னும் பலத்துறைகள் நல்ல முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று எதி ஊடகங்களாலே மக்களுக்கு வெட்டவெளிச்சமாக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஒரு குறுகிய காலகட்டத்தில் தன்னுடைய அனைத்து நிர்வாகங்களும் அடங்கிய ஒரு நகரத்தையே இடம் பெயர்த்தி வைத்திருப்பதன் மூலம் அவர்க்ளுடைய துரித நடவடிக்கைகளும் அதீத த்றமையும் வெளிப்பட்டிருக்கிறது. இவர்கள் நாடடைந்தால்செயலாக்கம் மிக்க ஒரு அரசு உருவாகும் என்பதில் மக்கள் ஐயபடுவதற்கு ஒன்றுமில்லை.

சனி, 3 ஜனவரி, 2009

முடிந்தால் இதை பாருங்கள்

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008