
லட்சக்கணக்கான் படைவீரர்கள், இந்தியா, சீனா,பாகிஷ்த்தான்,அமெரிக்கா,இஷ்ரேல் மற்றும் பல ஒருமித்த ஆதரவுடன், நவின ரக ஆயுதங்கள் குவிப்பு, கண்னிமைக்கும் நேரத்தில் பல குண்டுகளை வீசிவிட்டு கடந்து செல்லும் வானூர்திகள் இவைகள் அனைத்தும் கொண்ட முப்படைகள். இதையெல்லாம் வைத்துக்கொண்டு மூன்று மாதங்களாய் போரிட்டு ஒருசிறிய நிலப்பகுதியைக் கைப்பற்றியிருக்கிரது சிங்கள ரானுவம். இதற்கிடையில் பலநூறு படைவீரர்கள் உயிர்பலி, அப்பாவித் தமிழர்களிடம் வெறியாட்டம், இதையெல்லாம் கடந்து கிளிநொச்சிக்குள் புகுந்துள்ளது சிங்கள ரானுவம்.
படைவீரர்கள் குதுகளித்தனர், ராசபக்ஷே கொக்கரித்தார், ஊடகங்கள் கொன்டாடித்தீர்தன [குறிப்பாக இந்திய ஊடகங்கள்] தமிழர்கள் வீழ்வது சிங்களர்களை விடவும் இந்திய ஊடகங்களுக்கு மிகவும் கொன்டாட்டத்தை தருவதன் காரனம் எனக்கு புரியவில்லை. இது வானலாவிய வெற்றி விடுதலைபுலிகளின் அரசியல் தலைநகரத்தை கைப்பற்றிவிட்டோம், அவர்களும் கிட்டதட்ட அழிந்துவிட்டார்கள், இனி அவர்களால் இயங்கமுடியாது, அவர்களிடம் இருந்த அத்துனை தளவாடங்களும் அழிக்கப்பட்டுவிட்டன, மிச்சமிருப்பவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தால் உயிர் தப்பலாம் என்று கொக்கரித்தார் ராசபக்ஷே. அவர் அறிக்கைவிட்ட ஒருமணி நேரத்தில் சிங்கள ரானுவத் தளமொன்றில் மனிதவெடிகுண்டு ஒன்று வெடித்து சிதர மூவர் பலி பலர் படுகாயம் என்று அறிவிப்பு வந்தது.
சில மணித்துளிகளுக்குப் பிறகு திரு. நடேசன் அவர்கள் புலிகளின் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பேட்டி கொடுக்கிறார், "ஆம் உண்மைதான் ஆளில்லாத கிளிநொச்சியயை சிங்கள ரானுவம் கைபற்றிதான் விட்டது.
இதில் நமக்கு புலப்படும் உண்மை என்ன?
சுமார் மூன்று லகரம் மக்கள் வாழ்ந்துக்கொண்டிருந்த கிள்நொச்சியை சிங்கள ரானுவம் கைப்பற்றியபோது ஒரு ஆள் கூட இல்லையேஎங்கே போனார்கள் அத்துனைபேரும். புலிகளின் தகவல்ப்படி இருபத்தியைந்து நாட்களுக்கு முன்னமே புலிகள் முதற்கொண்டு அத்துனைபேரும் வேரு இடத்துக்கு சென்றுவிட்டார்கள். அதுமட்டுமில்லாமல் அங்கு புலிகளால் உருவாக்கப்பட்ட 135 கோடி மதிப்பிலான நிர்வாக அலுவலகங்கள் அனைத்தும் தரைமட்டமக்கப்பாட்டது. இதற்கு முன் வைக்கப்பட்ட காரணம் தங்களால் உருவாக்கபட்ட சிறு துரும்புக் கூட சிங்கள ரானுவத்திற்கு வுதவக்கூடாது என்பதுதான். இதில் 90 கோடி செலவில் புலிகளால் செங்கல் செங்கல்லாக பார்த்துக் கட்டப்பட்ட ஈழப் பல்கலைகழகமும் அடங்கும்.
இதற்கிடையில் சில பல நாட்களாக புலிகள் எதிர்த்தாக்குதலும் நடத்தவில்லை இருந்தும் கிளிநொச்சிக்குள் புகுவதற்கு இருபத்தியைந்து நாட்கள் ஆகிவிட்டன என்றால் என்ன காரனம்? அவர்களுக்கு புலியைக் கண்டு கிலி வந்துவிட்டது. அங்கு அது இருக்குமோ இங்கு இது இருக்குமோ என்று பயந்து பயந்து ஒளிந்து ஒளிந்து அங்குலம் அங்குலமாக நகர்ந்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் பாம்பில்லாப் புற்றுக்குள் எலிகள் நுலைவதைப்போல், புலிகள் இல்லா கிளிநொச்சிக்குள் சிங்கள ரானுவம் புகுந்நுவிட்டது. இதனால் புலிகள் தோற்றுவிட்டனர் என்று கருதமுடியாது, இதுபோல் புலிகள் பலமுறை பின்வாங்கி சிங்களம் மாதகணக்கில் போரிட்டு கைப்பற்றிய இடங்களை புலிகள் குறிகிய காலக்கட்டத்தில் அதிவேகமாக மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு எழும் சில கேள்விகள்:
1. ஆளில்லாத ஒரு நகரத்திற்குள் புகுவதற்கு இருபத்தியைந்து நாட்கள் தேவைப்பட்டதன் காரனம் என்ன?
2. இல்லை மக்களுடன் புலிகளும் அங்கு இருந்தார்கள் என்றால், இவர்கள் உள்ளே புகுந்த ஒரு சிறிய நேரத்தில் அவர்கள் அனைவரும் எங்குச் சென்று மறைந்தார்கள்.
3. புலிகளின் நிர்வாக நகரத்தை பிடித்துவிட்டோம் இனி அவர்களால் இயங்கமுடியாது என்று கூறினார்கள், ஆனால் சிறிது மணித்துளிகளிலே திரு. நடேசன் அவர்கள் புலிகளின் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் உறையாற்றுகிறார், அப்படியானால் அவைகள் எல்லாம் இயங்குகிரது என்றுதானே அர்த்தம்?
4. அவைகள் இயங்குபட்சத்தில் அடுத்த நிர்வாக நகரம் உருவாகிவிட்டதா?
இந்த பின்வாங்களில் புலிகளுக்கு சில நன்மைகளும் நடந்திருக்கிறது.
புலிகளிடம் ஒரு நல்ல அரசாங்கம் நடந்துக் கொண்டிருக்கிறது, அவர்களிடம் நிதித்துறை, நீதித்துறை, காவல்த்துறை, பொருளாதரத்துறை, நிர்வாகத்துறை இன்னும் பலத்துறைகள் நல்ல முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று எதி ஊடகங்களாலே மக்களுக்கு வெட்டவெளிச்சமாக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஒரு குறுகிய காலகட்டத்தில் தன்னுடைய அனைத்து நிர்வாகங்களும் அடங்கிய ஒரு நகரத்தையே இடம் பெயர்த்தி வைத்திருப்பதன் மூலம் அவர்க்ளுடைய துரித நடவடிக்கைகளும் அதீத த்றமையும் வெளிப்பட்டிருக்கிறது. இவர்கள் நாடடைந்தால்செயலாக்கம் மிக்க ஒரு அரசு உருவாகும் என்பதில் மக்கள் ஐயபடுவதற்கு ஒன்றுமில்லை.
தங்கள் முதல் கட்டுரை நல்ல இருக்கு....
பதிலளிநீக்குதொடந்து எழுதுங்கள் தோழர்